'பாடசாலைக் கல்விக்கு மகிழ்ச்சிகரமான ஆரம்பம் 2016' தரம் ஒன்று மாணவர்களை வரவேற்ற நிகழ்வு...!

பி.எம்.எம்.ஏ.காதர்-

தரம் ஒன்று மாணவர்களை தரம் இரண்டு மாணவர்கள் வரவேற்கும் 'பாடசாலைக் கல்விக்கு மகிழ்ச்சிகரமான ஆரம்பம் 2016'என்ற தொனிப்பொருளிலான நிகழ்வு இன்று(14-01-2016)பெரிய நீலாவணை அக்பர் வித்தியாலயத்தில் அதிபர் ஏ.எம்.ஜிப்ரி தலைமையில் நடைபெற்றது. 

இதில் பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.யஸீர் அறபாத்,விஷேட அதிதியாக   தென்கிழக்குப் பல்கலைக் கழக விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஏ.எல்.எம்.தாஹிர்,அதிதிகளாக ஏ.எஸ்.எம்.அமைப்பின் தலைவர் அஷ்சேய்க் யு.எல்.சஜீத்,எவரெடி விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் ஏ.கமால் மற்றும் அசிரியர்களும்,பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு தரம் ஒன்று புதிய மாணவர்களை தரம் இரண்டு பழைய மாணவர்கள் மலர்ச் செண்டு கொடுத்து  வரவேற்றனர்.இந்த நிகழ்வில் ஏ.எஸ்.எம்.அமைப்பின் ஏற்பாட்டில் இந்தியன் செலக்ஷன் அனுசரணையில் புதிய மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -