தொழில்ரீதியான தகுதிவாய்ந்த இலங்கை உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளின் 2016ம் ஆண்டுக்கான 01 வது கூட்டம் எதிர்வரும் 10.01.2016 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணியளவில் சாய்ந்தமருது பிரதான வீதி வைத்தியசாலை முன்பாக அமையப் பெற்றுள்ள பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அன்றை நிகழ்வுக்கு அனைத்து உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளையும் கலந்து கொள்ளுமாறும் சங்கத்தின் செயலாளர் ஜனாப். ஹுசைன் முபாறக் கேட்டுக்கொண்டார்.
இதன்போது பின்வரும் விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட இருப்பதாகவும் மேலும் அவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
1. சங்கத்தில் புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளல்.
2. 5200 பட்டதாரிகள் நியமணத்துக்குள் HNDA பட்டதாரிகளையும் உள்வாங்குதல் தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளல்.
3. கிழக்கு மாகாணசபை மேற்கொள்ளும் நியமணத்துக்குள் HNDA பட்டதாரிகளையும் உள்வாங்குதல் தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளல்.
4. 46/90 சுற்று நிரூபத்தில் எவ்வாறான விடயங்களை உள்வாங்குவது தொடர்பாகவும், எதிர்காலத்தில் தொடர்ந்தும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான கலந்தாலோசனைகளும், நடவடிக்கைகளும் மேற்கொள்ளல்.
5. புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்வதற்காக ரூபா 300.00 ஐ அங்கத்துவக் கட்டணமாக அறிவிடப்படும் என்றும்,
6. HNDA பட்டதாரிகளின் நிகழ்கால, எதிர்கால செயற்பாடுகள் சம்பந்தமான பத்திரிகையாளர் மாநாடு
போன்ற விடயங்கள் இம்முதலாவது கலந்துரையாடலில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவித்தார்.

