எம்.எம்.ஜபீர்-
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான கா.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் சம்மாந்துறை பிரதேசத்தில் இவ் வருடம் வைத்தியத்துறை, பொறியியல்துறை மற்றும் ஏனைய துறைகளிலும் சிறந்த பெறுபேற்றை பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் மன மகிழ்ச்சியடைகின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இம்முறை சம்மாந்துறை பிரதேசத்தில் வைத்தியத்துறை, பொறியல்துறை, வார்த்தகத்துறை, கலைத்துறை மற்றும் விசேடமாக அரசாங்கத்தினால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தொழில்நுட்பத்துறையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ள மாணவர்களுக்கும் விசேடமாக வைத்தியத்துறைக்கு துறைக்கு தெரிவான மாணவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்.
அத்துடன் கற்பித்த ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றோர்கள், பகுதிநேரங்களில் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதில் மனமகிழ்ச்சியடைகின்றேன்.
இன்று தெரிவாகியுள்ள அனைத்து மாணவர்களும் மென்மேலும் சிறந்து விளங்க பிராத்திப்பதோடு எதிர்காலத்தில் மற்ற மாணவர்களும் இந்த சம்மாந்துறை மண்ணில் சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என நாம் அனைவரும் பிராத்திக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
