நாமலின் தேவைக்காக மாதாந்தம் 158,000 ரூபாய் செலுத்தி நியமிக்கப்பட்ட விமான பணிப்பெண்..!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் பணிப்பெண் ஒருவர், நாமல் ராஜபக்ஷவின் வேலைகளுக்காக விமான வேலையாட்கள் ஒன்றியத்தின் புதிய உதவிச் செயலாளராக நியமிக்கபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜயரத்ன/வெலியமுன விசாரணை அறிக்கையின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜயரத்ன/வெலியமுன விசாரணையின் போது தான் பணிபுரிந்த இடத்தை விமான பணிப்பெண்ணான நித்யா சேனாநாயக்க சமரநாயக்கவினால் சரியாக விபரிக்க முடியவில்லை, தான் அலரி மாளிகையின் லங்கா கமலகொட என்ற பகுதியில் உதவி செயலாளராக பணிபுரிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விமானம் வேலையாட்கள் ஒன்றியத்தின் கேபின் குழு உறுப்பினர்கள், தங்களுக்கு விரும்பிய வழியில் மற்றும் தெரிவு செய்யப்படுதல் இன்றி ஆட்சியதிகாரத்தைப் கைப்பற்றி கொண்டார்கள்

ஜயரத்ன/வெலியமுன விசாரணை அறிக்கைகமைய, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் பணிப்பெண்னான நித்யா சேனாநாயக்க சமரநாயக்கவை பணம் செலுத்தப்பட்ட ஊழியராக நாமல் ராஜபக்சவுக்கு வேலை செய்வதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்காவின் கோரிக்கைகமையவே குறித்த பெண் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தினால் நித்யா சேனாநாயக்க சமரநாயக்கவுக்கு மாதாந்தம் சுமார் 158,000 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

நித்யா சேனாநாயக்க சமரநாயக்கவினால் வழங்கப்படும் சேவைகள் என்ன என்பது பற்றியும் எந்த விளக்கமும் இல்லை அத்துடன் அவரது வேலை கொடுப்பனவுகள் உட்பட அவரது அறைக்கும் விமான நிறுவனம் மூலமே செலுத்தப்பட்டுள்ளதாக குறித்த விசாரணை அறிக்கையில் முக்கியமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நித்யாவுக்கு மொத்தமாகவே 4.2 மில்லியனுக்கும் அதிகமாக பணம் செலுத்தப்பட்டுள்ளது. எனினும் அவர் இந்த பணத்தை திரும்ப திருப்பிக் கொடுக்க வேண்டும் ஜயரத்ன/வெலியமுன விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -