நிந்தவூரில் மாபெரும் சிரமதான நிகழ்வு..!

முஹம்மட் ஜெலீல்-
நிந்தவூர்-9 அல் ஹிக்மத் சனசமூக நிலைய ஏற்பாட்டில் இன்று 2016-01-23 சனிக்கிழமை காலை 6 மணி தொடக்கம் 11மணி வரை நிந்தவூர்-9 பிர்தௌஸ் பள்ளிவாசல் மையவாடி சிரமதான நிகழ்வு சனசமூக நிலையத் தலைவரும், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரும், மினா விளையாட்டுக் கழகத் தலைவருமான ஜனாப் கே.எம்.சாபீர் அவர்களின் தலமையில் மிகவும் சிறப்பாக வெற்றிகரமாக இடம்பெற்றது.

மேலும் இவ்சிரமதான நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் ஜனாப் எம்.ஜெபர் அவர்களும், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் எஸ்.வி.மௌலானா அவர்களும் மற்றும் பிரதேச சபை தொழில்நுற்ப உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர். மற்றும் இந்நிகழ்வுக்கு இப்பிரதேசத்தின் கழகங்களான ஹிக்மா விளையாட்டுக் கழகம், மினா விளையாட்டுக் கழகம் இரண்டும் மிகவும் ஒத்துழைப்பு வழங்கி சிரமதான பணிகளில் ஈடுபட்டது. 

மற்றும் நிந்தவூரின் ஏனைய கழக வீரர்கள், பொதுமக்கள் சனசமூக உறுப்பினர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், மினவர் சங்க உறுப்பினர்கள்,மாணவர்கள்,சமூக நலன் விரும்பிகள், மையவாடி அபிவிருத்தி உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். மற்றும் இவ் சிரமதான பணிக்கு மிகவும் உதவியாக நிந்தவூர் பிரதேச சபை J.C.B வாகனம், ரெக்டர் மற்றும் உபகரணங்கள் வழங்கி உதவி புரிந்தனர்.

மேலும் சிரமதான பணியில் ஈடுபட்டோருக்கு பொதுமக்கள் காலை ஆகார உணவுக்கான பண உதவிகளும் வழங்கி உதவியமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -