கல்வி சாரா ஊழியர்களின் பதவி உயர்வுகளில் கல்வி அமைச்சர் தலையிடுவது கண்டிக்கதக்கது...!

சலீம் றமிஸ்-

ல்வி சாரா ஊழியர்களின் பதவி உயர்வுகளில் கல்வி அமைச்சர் தலையிடுவது கண்டிக்கதக்கது. என ம்பாறை மாவட்ட செயலாளர்- எம்.ஜே.எம்.சஜீத் தெரிவித்தார். 

கல்வி அமைச்சின் ஆரம்ப துறை ஊழியர்களின் எண்ணிக்கை 2010.01.01. ம் திகதி செயற்படுகின்ற நிலையில் கல்வி சாரா ஊழியர்களை இனைத்து கொள்ளும் நடைமுறைக்கமைய மிக நீண்ட காலமாக சேவையிலுள்ள சிரேஷ்ட ஊழியர்களின் பதவியுயர்வுக்கு உள்ள வாய்பை தான்றோன்றித்தனமாக இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கையினூடாக சிரேஷ்ட ஊழியர்களுக்கு ஏற்படுகின்ற அநீதியை கல்வி அமைச்சர் நிவர்த்தி செய்கின்ற வரையிலும் தொடர்ச்சியாக தொழில் சங்க நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கு முடிவெடுத்துள்ளோம் என்பதுடன் கல்வி சாரா ஊழியர்களின் பதவி உயர்வுகளில் அரசியல் தலையிடுவது மிகவும் கண்டிக்கதக்க விடயம் எனவும் குறிப்பிட்டார்

இலங்கை கல்வி சாரா ஊழியர் ஒண்றினைந்த சங்கத்தின் உயர் பீட கூட்டம் குருவிட்ட சஜீPவ ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது இலங்கை கல்வி சாரா ஊழியர் ஒண்றினைந்த சங்கத்தின் அம்பாறை மாவட்ட செயலாளர் எம்.ஜே.எம். சஜீத் கருத்து தெரிவிக்கையில் மேற்கன்டவாறு குறிப்பிட்டார்

தொடர்ந்தும் பேசுகையில்;

இதற்கமைய 2015.12.28 ம் திகதி முற்பகல் 09.30 மணி தொடக்கம் கல்வி அமைச்சிக்கு முன்னால் ஆர்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம். அத்தினத்தில் அமைச்சின் மூலம் கிடைக்கின்ற பதிலை பொறுத்து அமைச்சின் முன்னால் தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டமொன்றை நடாத்துவதற்கும் இப்போராட்டம் பயனலிக்காத சந்தர்பத்தில் 2016 ஜனவரி முதல் வாரத்திலிருந்து தேசிய கல்வியல் கல்லூரி, ஆசிரிய பயிற்ச்சி கலாசாலை , அனைத்து தேசிய பாடசாலைகளிலும் கடமை புரியும் சகல கல்வி சாரா ஊழியர் வேலை நிமிர்த்தம் ஒன்றினை மேற்கொள்வதற்கும் தீர்மானித்துள்ளோம் எனவும் 28 ம் திகதி நடைபெரும் ஆர்பாட்டதில் சகல கல்வி சாரா ஊழியர்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். 

இந்நிகழ்வில் இலங்கை கல்வி சாரா ஊழியர் ஒண்றினைந்த சங்கத்தின் தலைவர் கே.சீ.ஏ.கே. கருனாசேகர, பொது செயலாளர் ஏ.கே.டபிள்யு. விஜயசேகர மற்றும் சங்கத்தின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -