நிந்தவூர் "லகான் விளையாட்டுக் கழகத்தின் 2015 ம் ஆண்டிற்கான வருடாந்த பரிசளிப்பு விழவும் வீரர்கள் கௌரவிப்பு நிகழ்வுமானது இன்று 26-12-2015 ஞாயிற்றுக் கிழமை நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் கழகத்தின் தலைவர் எ.எ.ஷாகிர் அஹமட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக சுகாதார பிரதி அமைச்சர் எம்.சி.எம், பைசால் காசிம் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுத்தீன் அவர்களும் கலந்துகொண்டதோடு விசேட அதிதிகளாக அம்பாறை மாவட்ட விளையாட்டுத் துறை உத்தியோகத்தர் எஸ்.எல். தாஜுதீன் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்களென பலர் கலந்துகொண்டனர்.
மேலும் இதில் நிந்தவூர் பிரதேச பாடசாலைகளில் 5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் அதிக பெறுபேறுகளை பெற்ற 36 மாணவ மாணவிகளும் கௌரவிக்கப்பட்டதுடன் 18 வறிய மாணவ மாணவிகளுக்கும் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் "லகான் விளையாட்டு கழகத்தின் அனைத்து உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டனர். லகான் விளையாட்டு கழகத்தில் 2015ம் ஆண்டின் விசேட திறமையை வெளிப்படுத்திய வீரர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் லகான் விளையாட் கழகமானது கழகம் உருவான காலம் தொட்டு இதுவரை காலமும் பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வாருகின்றமை குறிப்பிடத்தக்கது.



