உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு சிறந்ததொரு நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியிலுள்ள அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு, அம்பாறை டீ.எஸ்.சேனநாயக்க கல்லூரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இந்த நாட்டிலுள்ள அனைத்துச் சமூகங்களினதும் கலாசாரம் பாதுகாக்கப்படும். மேலும், பௌத்த தர்மத்தை பாதுகாக்க சிறுவர்கள் உட்பட அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.
அம்பாறை மாவட்டத்தில் தர்ம பாடசாலைகளை மேலும் அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சர் தயா கமகேயின் வேண்டுகோளுக்கமைய எதிர்காலத்தில் 50 அறநெறிப் பாடசாலைகளை அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.