![]() |
| செய்தியாளர்: எம்.எம்.ஜபீர் |
மத்தியமுகாம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் உயர் நீர்தாங்கியின் நீர்வழங்கல் திட்டத்தின் 3ஆம் கட்டத்தின் ஊடாக பொது மக்களுக்கு குடிநீர் வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த மாத நடுப்பகுதியில் அடையாள ரீதியில் ஆரம்பித்து வைக்க தீர்மானித்துள்ளோம்.
இருந்தாலும் எதிர்வரும் ஆறு மாத காலத்தில் நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மூவின மக்களுக்கும் குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இன்று (27) மத்தியமுகாமில் அமைக்கப்பட்டுவரும் குடிநீர்த் தாங்கியின் விஸ்தரிப்பு வேலைதிட்டம் தொடர்பாக பார்வையிட குறித்த இடத்திற்கு விஜயம் செய்த இவ்வாறு தெரிவித்தார்.
இவ்வேலைத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் ஜே.நஸ்றுல் கரீம், திட்டப் பணிப்பாளர் வை.டி.சில்வா ஆகியோரிடம் கலந்துரையாடினார்.
இதன்போது அமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம்.மாஹிர், ஆரிப் சம்சுதீன், அமைச்சரின் இணைப்பு செயலாளர் ரஹ்மத் மன்சூர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட செயலாளர் மன்சூர் ஏ.காதர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளர் ஏ.சி.ஏ.நஸார், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்தியமுகாம் மத்திய குழத் தலைவர் ஏ.நளீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சவளக்கடை மத்திய குழத் தலைவர் ஏ.அஸீஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாளம்பைக்கேணி மத்திய குழத் தலைவர் எம்.எச்.மஹ்ரூப் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.





