ஷபீக் ஹுசைன் -
அண்மைக்காலமாக இஸ்லாத்துக்கு விரோதமான சில தீய சக்திகள் நமது நாடடில் முஸ்லிம்களுக்கு தொல்லைகொடுத்து வருகின்றனர்.
இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் இவ்வேளையில் நல்லாட்சி மலர்ந்துள்ள இந்நாட்டிலும் ஏனைய நாடுகளிலும் வசிக்கும் மக்களுக்கு சமாதானமும் அமைதியும் நிலவ எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக. இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தனது மீலாத் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவ் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நபிகள் நாயகம் முஹம்மத் நபி (ஸல்) அவர்களினால் இஸ்லாமிய வரலாற்றில் மா பெரும் மாற்றம் ஏற்பட்டது. அதன் பயனாக இஸ்லாம் உலகின் பாரிய சக்தியாக திகழ்ந்தது. இஸ்லாம் வேகமாக ஏனைய நாடுகளுக்கும் பரவியது. புனித மக்காவில் இருந்து புனித மதீனாவுக்கு நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களும் அவர்களது ஸஹாபா தோழர்களும் ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்ட பின்னர் இஸ்லாமிய சமூக அமைப்பை அங்கு கட்டியெழுப்பினார்கள். அதன் அடிப்படையில் இஸ்லாம் உலகின் பல நாடுகளுக்கும் வியாபித்தது.
இலங்கையிலும் ஆரம்பா காலத்தில் இருந்து இஸ்லாத்தை முஸ்லிம்கள் பின்பற்றி வருகின்றனர். பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில் இந்நாட்டு முஸ்லிம்கள் தமது சமயத்தை கடைபிடித்து வருகின்றனர். அண்மைக்காலமாக இஸ்லாத்துக்கு விரோதமான சில தீய சக்திகள் நமது நாடடில் முஸ்லிம்களுக்கு தொல்லைகொடுத்து வருகின்றனர். அவற்றுக்கு முகங்கொடுத்து, சவால்களை முறியடித்து வெற்றியடைய நாம் முன்வர வேண்டும். அதற்கு எல்லா வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.
அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம்,
தலைவர் - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்,
நகர திட்டமிடல் நீர் வழங்ல் அமைச்சர்.
