அமைச்சர் ரிஷாத்துக்கு 100 கோடி ரூபாய் வழங்க தான் தாயர் - ஆனந்த சாகர

கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு பல நிபந்தனைகளின் அடிப்படையில் 100 கோடி ரூபாய் வழங்க தான் தாயர் என தேசிய சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த சாகர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலமொன்றை பதிவுசெய்ய இன்று கொழும்பு கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளித்திருந்த போதே தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (19) விகாரமகாதேவி பூங்கா அருகாமையில் அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தி தனக்கெதிராக ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்து தனது பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக கூறி ஆனந்த சாகர தேரருக்கெதிராக அமைச்சர் றிசாத் பதியுதீன் முறைப்பாடு செய்திருத்தார்.

தேசிய சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த சாகர பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -