அண்மையில் கொழும்பில் நடைபெற்ற லத்தீன் அமெரிக்கப் பாடகர் என்ரிக் இக்லேசியஸ் கலந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சி தொடர்பில் நேற்று அம்பாறையில் வைத்து ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.
இலங்கையின் பௌத்த கலாசாரத்தைப் பாதுகாக்கும் வகையில் இனிவரும் காலங்களில் அவ்வாறான கச்சேரிகளுக்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதியின் மூத்த புதல்வி சதுரிக்காவின் கணவர் சுரஞ்சித் உட்பட ஜனாதிபதியின் உறவினர்கள் மூவர் என்ரிக் இக்லேசியஸின் இசைக் கச்சேரியில் கலந்து கொண்டிருந்ததாக புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகியுள்ளன.
கலாசாரத்தைப் பாதுகாப்பது தொடர்பில் நாட்டை திருத்த முன்னர், ஜனாதிபதி தனது வீட்டை திருத்த வேண்டும் என சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

