றியாஸ் ஆதம் , அபு அலா -
அட்டாளைச்சேனை மறுமலர்ச்சி நிறுவனத்தின் 18வது ஆண்டு நிறைவையொட்டி அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கல் மற்றும் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும் அண்மையில் ஒஸ்ரா மெடிக்கல் நிறுவனத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
மறுமலர்ச்சி நிறுவனத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான ஏ.எல் றமீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகான சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவம் கௌரவ அதிதியாகவும், விசேட அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம் காசீம், உதவிப்பிரதேச செயலாளர் ரீ.ஜே அதிசயராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்
இதன்போது அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள 70 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் கடந்த காலங்களில் அட்டாளைச்சேனை மண்ணுக்கு பெருமை சேர்த்த சாதனையாளர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
உதைப்பந்தாட்ட துறையில் தேசிய ரீதியில் சாதனை படைத்த பிரபல உதைப்பந்தாட்ட வீரர் ஹம்ஸா சனூஸ வாழ்நாள் சாதனையாளர் விருதையும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு சமூகப்பணியில் ஈடுபட்டு வரும் அன்வர் நௌஷாத்திற்கு சமாதானத்துக்கான விருதையும், மற்றும் சுதேச வைத்தியத்துறையில் நீண்ட காலம் சேவையாற்றி வரும் டாக்டர் கே.எல்.எம்.நக்பர்க்கும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட அட்டாளைச்சேனை பிரதேச ஊடகவியலாளர்கள் 20 பேருக்கு நீரிழிவு நோய் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டதுடன் ஒஸ்ரா மெடிக்கல் நிறுவனத்தினால் பேக் (bag) ஒன்றும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட அட்டாளைச்சேனை பிரதேச ஊடகவியலாளர்கள் 20 பேருக்கு நீரிழிவு நோய் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டதுடன் ஒஸ்ரா மெடிக்கல் நிறுவனத்தினால் பேக் (bag) ஒன்றும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர்களின் நலனில் நிறுவனங்கள் அக்கரை காட்டுவது அவர்களின் செயற்பாட்டுத் தன்மையை அதிகரிக்க வழிவகுப்பதோடு அவர்களை ஊக்குவிப்பதும் பாதுகாப்பதும் காலத்தின் தேவையாகும் என அட்டாளைச்சேனை மறுமலர்ச்சி நிறுவனத்தின் ஆலோசகரும் ஊடகவியலாளருமான தேசகீர்த்தி எம்.ஐ.எம்.றியாஸ் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை மறுமலர்ச்சி நிறுவனத்தின் அனுசரணையுடன் அட்டாளைச்சேனை ஒஸ்ரா மெடிக்கல் நிறுவனத்தினால் ஊடகவியலாளர்களுக்கு சைட் பைகள் வழங்கும் நிகழ்வு (26) அன்று மறுமலர்ச்சி நிறுவனத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான ஏ.எல்.றமீஸ் தலைமையில் நடைபெற்றபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்,
கடந்த காலங்கள் இல்லாதது போன்று இன்று ஊடகவியலாளர்கள் எந்தவிதமான கஷ்டங்களுமின்றி நிம்மதியாக தங்களது ஊடகச் செயற்பாட்டினை மேற்கொள்கின்றனர் ஆனால் ஊடகவியலாளர்களின் நலன்களில் அரசு மட்டுமல்ல தனியார் நிறுவனங்களும் கவனம் செலுத்துவது காலத்தின் தேவையாகும்.
ஊடக செயற்பாட்டின் மூலம் இந்த நாட்டில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை யாரும் மறக்க முடியாது பல்வேறு விடயங்கள் ஊடகத்தின் ஊடாக உடனுக்குடன் எல்லோரும் அறிந்து கொள்கின்றனர். இதனால் பல மாற்றங்களும் நன்மைகளும் திருத்தங்களும் நடைபெறுகின்றன.
எதிர் காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை ஏனைய நிறுவனங்களாலும் எங்களது அம்பாறை மாவட்ட சீட்ஸ் நிறுவனத்தாலும் வழங்க திட்டமிட்டுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.








