பதவி விலகுவாரா அமைச்சர் ராஜித...?

வன்ட் கார்ட் மோசடிகள் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமாயின் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கையொன்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இக்கோரிக்கைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி, சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் மோசடிகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஒருங்கிணைப்பு செயலாளர் ஒருவர் குறித்த நிறுவனத்திடமிருந்து 50 மில்லியன் ரூபா பணம் பெற்றுக் கொண்டுள்ளமை அண்மையில் தெரிய வந்திருந்தது.

எனினும் குறித்த பணத்தொகையை அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்து மீண்டும் அவன்ட் கார்ட் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவியிருந்தன.

இந்தச் சம்பவம் குறித்து பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணைகளை முன்னெடுக்க இடமளிக்கும் வகையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது பதவியிலிருந்து ராஜினாமாச் செய்ய வேண்டுமென்று அமைச்சர்கள் மட்டத்தில் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே திலக் மாரப்பன தனது அமைச்சுப் பதவியை ராஜினாமாச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -