பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தலாம் ஆனால்....!

மிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்தலாமென்றும், ஆனால் மாவீரர்களுக்கு அஞ்சலி என்ற போர்வையில் புலிகள் இயக்கத்திற்கு உயிரூட்ட இடமளிக்கப்போவதில்லையென்றும் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அவ்வாறான செயற்பாடுகளில் யாராவது ஈடுபட்டால், அதனை கடுமையாக எதிர்ப்போம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின்போது உயிரிழந்த உறவுகளை நினைவுகூர அரசு அனுமதிக்க வேண்டுமென்பதற்கு தாம் எவ்வித எதிர்ப்பும் கிடையாதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தில் உயிர்நீத்த விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இன்று நாடாளுமன்றில் செல்வம் அடைக்கலநாதன் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -