எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தில் வெளிக்கள அரச உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் பெண்களுக்கு சலுகையடிப்படையில் அரசாங்கத்தினால் மோட்டார் சைக்கிள் வழங்கும் மூன்றாம் கட்ட நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை (16) திருகோணமலை பிரட்றிக் கோட்டைக்கருகாமையில் அமைந்துள்ள சங்கமித்தை பௌத்த விகாரைக்கருகில் வைத்து திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாரவின் தலைமையில் நடைபெற்றது.
கடந்த 2014-12-31ஆம் திகதிக்கு முன்னர் கட்டணம் செலுத்திய 470பேருக்கு இம்மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டது. வெளிக்கள அரச உத்தியோகத்தர்களுக்கான மோட்டார் சைக்கிள்களை மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கி வைத்தார்.
நீண்ட நாட்களாக எதிர்பார்புடன் இருந்த பெண் உத்தியோகத்தர்கள் இது தொடர்பில் தமது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.