ஆசிரியர்கள் கல்வியாளர்களை நாம் வாழும் காலமெல்லாம் கௌரவப் படுத்த வேண்டும் - உதுமாலெப்பை MPC

சலீம் றமீஸ்-
ல்வித்துறைக்கு உயிர் கொடுத்து ஆணிவேராக செயட்படும் ஆசிரியர்கள், கல்வியாளர்களை நாம் உலகில் வாழும் காலமெல்லாம் கௌரவப் படுத்த வேண்டும். நமது மாணவர்களுக்கு சிறந்த கல்வியினை ஊட்டி அவர்களை நல்ல ஆளுமை உள்ளவர்களாகவும், சாதனையாளர்களாகவும் உருவாக்கும் ஆசிரியர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் அவர்கள் மரணித்த பின்பும் நிரந்தரமான நன்மைகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். 

நாம் எப்போதும் நமது பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் மற்றும் கல்வியாளர்களையும் கண்ணியப்படுத்தி வாழ்கின்ற போதுதான் நமது வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய முடியும் என கிழக்கு மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

பொத்துவில் சின்ன உல்லை அல்-அக்ஷா வித்தியாலத்திலயத்தின் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கும் நிகழ்வும், போட்டோ பிரதி இயந்திரம் மற்றும் பேண்ட் உபகரணங்களும் வழங்கி வைக்கும் நிகழ்வும், பாடசாலை மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் எச்ஆர்.எம்.கலீல் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் கூறுகையில், தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான அதாஉல்லா அவர்களுக்கும், எனக்கும் கிடைத்த அரசியல் அதிகாரத்தினை உச்சமாக பயன்படுத்தி பொத்துவில் பிரதேச மக்களுக்கு அவசியமான தேவைகளை இனங்கண்டு முடிந்தளவு பணி புரிந்துள்ளோம். குறிப்பாக, இப்பிரதேச கல்வித்துறைக்கும் பணியாற்றி வந்துள்ளோம்.எதிர் காலத்தில் பொத்துவில் பிரதேசத்தில் தனியான கல்வி வலயம் ஒன்று உருவாகி இப்பிரதேசம் கல்வித்துறையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் ஆரம்ப கட்ட நடவடிக்ககைளை மேற்கொண்டு பொத்துவில் கல்வி வலயத்துக்கான உப-வலயத்தினை உருவாக்கி நடைமுறைப் படுத்தியுள்ளோம்.

பொத்துவில் வலயத்திற்கான உப-கல்வி வலயம் உருவாக்கப்பட்டு குறுகிய காலத்தினுள் அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள மூன்று கோட்டங்களில் பொத்துவில் கோட்டம் இரண்டாவது தரத்தினை பெற்றிருப்பதையிட்டு இப்பிரதேசத்தினை உள்ளத்திiனால் நேசிப்பவன் என்ற வகையில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த நிலையை அடைவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட கல்வி அதிகாரிகளுக்கும் நன்றிகளை தெறிவித்துக் கொள்கின்றேன்.

அல் - அக்ஷா வித்தியாலயம் கடந்த காலங்களிலிருந்து பல சாதனைகளை புரிந்து வருகின்றது. இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் செயல்பட்ட முன்னாள் அதிபர் றகுமத்துல்லா, இன்றைய அதிபர் கலீல் உட்பட கல்வி அதிகாரிகளும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.பெற்றோர்கள் நமது பாடசாலை பிள்ளைகளுடைய கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். நவீன உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.நமது முன்னோர்கள் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து நீண்ட நேரம் அமர்ந்து தங்களுக்குள் மனமிட்டு உரையாடி நிம்மதி பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்துள்ளனர். 

ஆனால், இந்த நவீன காலத்தில் பேஸ்புக், இணையத்தளங்கள், வட்சப், ஸ்கைப், வைபர் போன்றவற்றில் உலகம் தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நடைமுறையில் உள்ளவற்றில் நல்லவைகளும், தீயவைகளும் உள்ளன. மாணவர்களாகிய நீங்கள் உங்கள் கல்வி வளர்ச்சிக்காக நல்லவைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். இந்த நவீன உலகத்தில் எமது மாணவர்கள் தவறானவைகளை பயன்படுத்துகின்ற போதுதான் சமூகத்திலும், நமது கலாசாரத்திற்கும் பெறும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. கல்வியும், ஒழுக்கமும் சேர்ந்து வளர்வதில்தான் கல்வியின் சிறப்பு தங்கியுள்ளது.

மாணவர்களான நீங்கள் வாழ்க்கையில் எந்த நிலைக்கு உயர்ந்தாலும் நமது பிறந்த மண்ணையும், கலாசாரத்தையும் மற்றும் பெற்றோர்கள், கல்வி அதிகாரிகள் ஆகியோர்களையும் மதித்து கௌரவப்படுத்த வேண்டும். இக்கல்லூரின் எதிர்கால வளர்ச்சிக்கு அரசியல் தலைவர்களும், கல்வி அதிகாரிகளும் இணைந்து எதிர்காலத்தில் பொத்துவில் பிரதேச கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்தும் பணியாற்ற வேண்டும் இப் பாடசாலையின் வளர்ச்சிக்கு எப்போதும் உங்களுடன் இணைந்து பணியாற்ற வல்ல இறைவன் உதவி புரிய வேண்டுமென பிரார்த்திக்கின்றேன். எனவும் மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை மேலும் தெரிவித்தார்.

இப்பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் மற்றும் பேண்ட் உபகரணங்களை வழங்கி வைத்த மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் பேண்ட் குழு மாணவர்களுக்கான சீருடை கொள்வனவு செய்வற்காக காசோலையை அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாஸீம் அவர்களிடம் வழங்கி வைத்ததுடன் சர்வோதய ஜூம்ஆப் பள்ளிவாயலின் கலாசார மண்டபம் அமைப்புக்கான காசோலையினையும் பள்ளிவாயல் தலைவரிடமும், குடாக்களி மீனவர்களுக்கான தண்ணீர் தாங்கி அமைப்பதற்கான காசோலையினையும் வழங்கி வைத்தார்.

பொத்துவில் பிரதேச கல்வி வளர்ச்சிக்கும், பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும், மாணவர்களுக்கான தேவைகளுக்கும் பணிசெய்து வருகின்றமைக்காக இந்த நிகழ்வின் பிரதம அதிதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் கௌரவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற முன்னாள் பொத்துவில் உப-வலயப் பணிப்பாளர் ஏ.ஏ.அஸீஸ், ஓய்வு பெற்ற இப் பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.ஏ.சி.எம்.றகுமத்துல்லா ஆகியோர் கிழக்கு மாகாண சபை உறுப்பினரினால் பொன்னாடை போர்த்தியும், நினைவு பரிசும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளான ஏ.ஏ.தனா, என்.பாத்திமா றிகாஸா ஆகியோருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டு பிரதம அதிதியினால் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் கௌரவ அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாஸீம், பொத்துவில் உப-கல்வி வலயப் பணிப்பாளர் என்.அப்துல் வஹாப், உதவிக்கல்விப் பணிப்பாளர் கே.ஹம்ஸா, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்களின் இணைப்பாளர் ஏ.பதுர்கான,; முன்னாள் உப-கல்விப் பணிப்பாளர் ஏ.ஏ.அஸீஸ், முன்னாள் அதிபர் எம்.ஏ.சி.எம்.றகுமத்துல்லா, கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.புஹாரி, ஆசிரிய ஆலோசகர்களான எம்.ஐ.எம்.மன்சூர், ஏ.எல்.எம்.இப்றாஹிம் உட்பட முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -