அரசுக்கு எதிராக விமல்- ராஜபக்ஷ கூட்டணியின் இணையத்தள யுத்தம் அம்பலம்..!

ரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு கடும் விமர்சனம் தெரிவிக்கும் வகையிலான இணையத்தள யுத்தமொன்றை விமல் வீரவன்ச, மஹிந்த ராஜபக்ஷ கூட்டணி ஆரம்பித்துள்ளது.

இதற்காக அவர்கள் ஏராளமான சிங்கள இணையத்தளங்களை வெவ்வேறு பெயர்களில் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் ஏராளமான புதிய குரூப்புகள் இதற்காக உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் ஊடகவியலாளரும், சந்திரிக்காவினால் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்டவருமான முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும செயற்படுகின்றார்.

தற்போதைக்கு இதற்காக பௌத்த விகாரையொன்றும், தனியார் கட்டிடம் ஒன்றும் பயன்படுத்தப்படுவதுடன் சுமார் 100 பேர் வரை இங்கு பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை காலமும் விமல் வீரவன்ச மற்றும் மஹிந்த ராஜபக்ஷ கூட்டணிக்கு ஆதரவாக இருந்த இணையத்தளங்களும் இந்த வலையமைப்புடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக அண்மைக்காலமாக அரசாங்கத்தின் செயற்பாடுகள் இணையத்தள செய்தித்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கூடுதல் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -