தரமிழந்த நிலத்தை புனரமைப்புச் செய்யும் திட்டம் அங்குரார்ப்பனம்..!

ஹாசிப் யாஸீன்-
யிர்ச் செய்கைக்கு பயன்படாமல் காணப்படும் காணிகளை வளப்படுத்தி அதில் பயிர்ச்செய்கையினை மேற்கொள்ளும் வேலைத்திட்டத்தினை காணி உபயோகத் திட்டமிடல் திணைக்களம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் தரமிழந்த நிலத்தை புனரமைப்புச் செய்யும்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது கமநலச் சேவைக் காரியாலய வளாக நிலத்தினை வளப்படுத்திஅதில் மரநடும் மாவட்ட நிகழ்வு நேற்று (24) இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலகமும், சாய்ந்தமருது பிரதேசசெயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், மாவட்ட காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.நஜீப், சாய்ந்தமருது கமநல சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.சம்சுதீன், மாவட்டவிவசாய வியாபார ஆலோசகர் எம்.எம்.ஜெமீல், காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.ஸாஹிர், காணிப் பயன்பாடு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.அனஸ் உள்ளிட்ட விவசாய உத்தியோகத்தர்கள், வட்ட விதாணைமார் என பலரும்கலந்து கொண்டனர்.

இதன்போது வளப்படுத்திய சாய்ந்தமருது கமநலச் சேவைக் காரியாலய வளாக காணியில்அதிதிகளினால் பயன்தரும் பழ வகை மரங்கள் நடப்பட்டதுடன் அதற்கான நீர் விநியோகமும்ஆரம்பித்து வைக்கப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -