செய்தியாளர்-எஸ்.அஷ்ரப்கான
கொழும்பில் பிறந்து, கொழும்பிலேயே கல்வி கற்று, தற்போது பிற மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், கொழும்பு மாவட்டப் பாடசாலைகளில் பணிபுரியவிரும்பின், தம்மோடு தொடர்பு கொள்ளுமாறு மாகாணசபை உறுப்பினரும், அக்ரம் மன்றத்தின் தலைவருமான முஹம்மது அக்ரம் கோரிக்கை விடுத்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும் என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இது விடயமாக குறிப்பிடும்போது,
சுய விபரக்கோவை விபரங்கள் மற்றும் ஆவனங்களை தபால் மூலம் அக்ரம் மன்றம், இல 83, மாளிகாகந்த வீதி, மருதானை, கொழும்பு-10 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இக்கோரிக்கையையும், இது தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளையும் வெகுவாக வரவேற்றுள்ள இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம், இந்தப்பணி இலகுவாக அமைய சில ஆலோசனைகளையும் முன் வைக்கின்றோம்.
கொழும்பு மாவட்ட அல்லது மேல் மாகாண ஆசிரியர்கள் வெளி மாவட்டத்தில் அல்லது வெளி மாகாணத்தில் பணிபுரிவது போல், வெளி மாவட்ட அல்லது வெளி மாகாண ஆசிரியர்கள் கொழும்பு மாவட்டத்தில் அல்லது மேல் மாகாணத்தில் பணிபுரிந்து வருகின்றார்கள்.
இவ்வாசிரியர்களின் சேவை,மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்ட பாடசாலைகளுக்கு மாத்திரமின்றி, ஏனைய மாகாணங்களின் மாவட்ட பாடசாலைகளுக்கும் அவசியமானதாகும்,
இந்நிலையில், வெளி மாகாணத்தில் பணிபுரியும் மேல் மாகாண ஆசிரியர்கள் மேல் மாகாணத்தில் பணிபுரிய விரும்புவதுபோல், மேல் மாகாணத்தில் பணிபுரியும் வெளிமாகாண ஆசிரியர்கள் தங்களது மாகாணத்தில் பணிபுரியவும் விரும்புவார்கள்.
இவ்வாறான நிலையில், இத்தகையவர்களின் விருப்பத்தையும், விபரங்களையும் கோருவதன் மூலம், ஒத்துமாறல் இடமாற்றங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கும், ஆளணித் தேவைக்கேற்ப ஆசிரியர்களை இடமாற்றிக் கொள்வதற்கும் வசதியாக இருக்கும். இதனை கருத்தில் எடுத்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாணசபை உறுப்பினரும், அக்ரம் மன்றத்தின் தலைவருமான முஹம்;மது அக்ரம் அவர்களுக்கு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம். ஆனஸ் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.