கே.சீனி முகம்மது-
இளைஞ்ஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்ப்புமனு தாக்கல் இன்று நாடு பூராகவும் இடம்பெற்றது.
இதில் அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திலும் இவ் வேட்புமனு தாக்கல் இடம்பெற்றது. இதில் தேசிய இளைஞ்சர் சேவை மன்றத்தின் அதிகாரி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் கல்முனை போலிஸ் நிலைய அதிகாரிகள் இதில் பிரசன்னமாகி இருந்தனர்.
எதிர்வரும் 07.11.2015 இல் நடைபெறவுள்ள தேர்தலில் கல்முனை சம்மாந்துறை ஆகிய இரு தேர்தல் தொகுதிகளையும் இணைத்ததாக போட்டியிட ஜனாதிபதி சாரணரும் சமூக ஆர்வலருமான ஏ எம் முஹம்மத் தில்சாத் இன்று தனது வேட்ப்பு மனுவை பிரதேச செயலாளர் ஏ எல் எம் சலீமி டம் கையளித்தார்.
பல்வேறு சமூக அமைப்புகளில் பதவி வகித்து வரும் தில்சாத் தேசிய சர்வதேச விருதுகளையும் வென்ற ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.