எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் மக்கள் 1985ஆம் ஆண்டு காலப்பகுதியில் துணிகரமாக வாழ்ந்தவர்கள் பின்பு பல கசப்பான அனுபவங்களினால் பல்வேறு வகையான துன்பங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது,தற்போதைய அரசின் சில வாக்குறுதிகளுக்கேற்ப படிப்படியாக மாற்றங்கள் நடைபெற்று வருகின்றது.
அதனைத் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எதிர்பார்க்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைரெட்ண சிங்கம் தெரிவித்தார். திருகோணமலை நகர சபை நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை (28) மாலை 4.00 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் அ.அச்சுதன் எழுதிய பேச்சும் செயலும் கவிதையும், கலாபூசணம், கவிக்குயிலன் சிவஸ்ரீ அ.அரசரத்திணம் எழுதிய ஏக்கம் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும்,மக்கள் வடக்கு கிழக்கிலே மக்கள் பட்ட கஸ்டங்கள் போதும் இனிமேல் வெடி சத்தங்களை மறந்து தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்.அதற்காக வேண்டி எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் மும்முரமாக குறல் கொடுத்து வருகின்றார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்ற போதிலும் அது விரைவு படுத்தப்பட வேண்டும்.
தமிழ் சமுகத்தின் உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும்.தமிழ் மக்களின் பாரம்பரியம், கலை,சமயங்களில் செல்வாக்குள் அதிகரித்தே செல்கின்றது. ஒரு ஊடகவியலாளன் மக்கள் படுகின்ற துன்பங்கள் கஸ்டங்கள் மற்றும் தமிழ் இனத்தின் உணர்வுகளைதனது பேனாவின் மூலம் சிறப்பாக சித்தரித்துள்ளார் என்றார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கிராமிய தொழிற்துரை திணைக்களத்தின் பணிப்பாளர் கு.குணநாதன்,திருகோணமலை நகர சபையின் முன்னால் தவிசாளர் க.செல்வராசா,உட்பட களைஞர்கள்,கவிஞர்கள் எழுத்தாளர்கள், சமூக ஆர்வளர்கள் ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.