அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரவை அந்தஸ்து அமைச்சர் ஒருவர், பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக முறையிடப்பட்டுள்ளது
இது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டுள்ளனர்.
சட்டத்தை மீறினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது ஆதரவாளர்களை விடுவிக்க வலியுறுத்தியே அமைச்சர் மிரட்டி வருகிறார்.
இல்லையெனில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த அமைச்சருக்கு ஆதரவாக மாகாணசபை உறுப்பினர் ஒருவரும் பொலிஸாரை அச்சுறுத்தி வருவதாக முறையிடப்பட்டுள்ளது.