எப்.முபாரக்-
திருகோணமலை கந்தளாய் பிரதான வீதியில் முச்சக்கரவண்டியொன்றும் மோட்டார் சைக்கிலும் இன்று வெள்ளிக்கிழமை (30) காலை 10.00மணியளவில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலத்த காயங்களுக்குள்ளானவர் கந்தளாய் 94ஆம் கட்டையைச் சேர்ந்த ருவான் திலக்க வயது (28) எனத்தெரிவிக்கப்படுகின்றது. வாகனம் ஒன்றை மோட்டார் சைக்கிளில் சென்றவர் முந்திச் செல்ல முற்பட்ட போது வேகமாக சென்ற முச்சக்கரவண்டியோடு மோதுண்டுள்ளதாகவும், இப்பிரதேசங்களில் மழை பெய்து கொண்டிருப்பதால் வேகத்தை குறைத்தும் வீதியில் வழுக்கிச் சென்று விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.