கைது செய்யப்பட்ட பிள்ளையானிடம் தொடரும் விசாரணை..!

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை தடுத்து வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2005 ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்று பெற்றுகொள்வதற்காக பிள்ளையான் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டார்.

அதற்கமைய நேற்று மாலை 05 மணியளவில் பிள்ளையான் குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகிய நிலையில் முதற்கட்ட வாக்குமூலம் பெற்றுகொண்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சரை தற்போது வரையில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த கொலை தொடர்பில் தமிழீழ மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பிரதிப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா மற்றும் ரங்கசாமி கணகநாயகம் என்ற இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -