ந.குகதர்சன்-
வாகரை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும், வாகரைப் பிரதேச சபையின் வருமான பரிசோதகரும் இணைந்து மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது விற்பனைக்காக கொண்டு சென்ற லொறியிலிருந்த ஒரு தொகுதி பாவனைக்குதவாத பழுதடைந்த மரக்கறிகள் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட வாகனத்தில் இருந்த மரக்கறிகள் பழுதடைந்து அழுகிய நிலையில் காணப்பட்டதுடன், வாகரைப் பிரதேசத்தில் கிராமம் கிராமமாக சென்று வழமையாக இவ்வியாபாரம் நடைபெற்று வருவதாகவும்; அறிய முடிகின்றது.
கைப்பற்றப்பட்ட வாகனத்திலிருந்த ஊறுகாய் மற்றும் சில பொருட்களுக்கு காலாவதி திகதி இடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச் சுற்றி வளைப்பு நடவடிக்கையில் வாகரைப் பிரதேச சபையின் வருமான பரிசோதகர் தி.கோபிநாத் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ரமேஸ் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான எஸ்.சந்திரமோகன், எஸ்.அமிர்தாப் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது கைப்பற்றப்பட்ட மரக்கறிகள, உருளைக்கிழங்கு மற்றும் வாழைப்பழம் என்பன கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.



