பாடசாலைக்கு சென்ற சிறுமியை காணவில்லை அந்த சிறுமியின் உடைகள் மற்றும் பாடாசலை புத்தக பொதி ஆகியவற்றை வைத்திருந்த நபர் பிடிக்கப்பட்டார். இதனால் புஸ்ஸலாவை கட்டுகித்துலை எல்பட தோட்டத்தில் பொலிசாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் மோதல் நிலை உருவானது.
மேற்படி சிறுமி சந்தேக நபரின் முச்சக்கர வண்டியிலிருந்து தப்பி காட்டுப் பகுதிக்குள் ஓடியதாக ஒருவர் புஸ்ஸலாவ பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேக நபரின் முச்சக்கர வண்டிக்குள் சிறுமியின் பாடசாலை சீரூடை மற்றும் சப்பாத்து புத்தக பொதி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
மேற்படி நபரை தோட்ட மக்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர், எனினும் அவரை அழைத்து செல்லும்போது அங்கு குழப்ப நிலையேற்பட்டது.
சிறுமியை தேடும் பணியில் மக்கள் ஈடுபட்டுள்ள போதும் இதுவரை அந்த சிறுமி கண்டுப்பிடிக்கப் படவில்லை இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் தலைமையில் நிர்வாகபொலிஸ் பொறுப்பதிகாரி சம்பத் விக்ரமரத்னவின் குழு மேற் கொண்டுவருகின்றது.