வடகிழக்கை சேர்ந்த விசேட தேவையுடைவர்கள் அரசியலில் பங்குபெற வேண்டும்...!




டகிழக்கை சேர்ந்த விசேட தேவையுடைவர்கள் அரசியலில் பங்குபெற வேண்டும்  அருட்தந்தை கிறிஸ்ரி விசேட தேவையுடையேரையும் அரசியலில் பங்குபெறச்செய்யும் உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டுமென வவுனியா வறோட் அமைப்பின் துணை தலைவர் அருட்தந்தை கிறிஸ்ரி ஜோண் தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவில் விசேட தேவையுடையோருக்கு உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் இணைந்து பேச்சுக்களை நடாத்தும் ஒன்றுகூடலானது மூன்றாவது நாளாய் இன்றும் கொழும்பு ஹலதாரி ஐந்து நட்சத்திர விடுதியில் இடம்பெற்றுவருகின்றது.

இலங்கையை பொறுத்தவரையில் வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் இறுதிக்கட்ட யுத்தத்தினால் அவயவங்களை இழந்து பெரும் எண்ணிக்கையிலானோர் விசேட தேவையுடையவர்களாக இருந்துவருவதாக சுட்டிக்காட்டினார்.

இவர்களுக்கான அரசியல் உரிமை என்பது பெற்றுக்கொடுக்கப்பட வேண்டிய தேவை இருப்பதாக தெரிவித்த அவர்,இவர்களை எவ்வாறு அரசியலில் பங்குபெறச்செய்வது மற்றும் தேர்தலில் இவர்களுக்கான வாக்குரிமையை பெற்றுக்கொடுத்தல் மற்றும் வாக்களிப்பின்போது இவர்களுக்கு தேவைப்படும் விசேட தேவையை எவ்வாறு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சார்க் நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளை உள்ளடக்கியுள்ள இந்த சந்திப்பில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் அங்கவீனராக்கப்பட்டுள்ள விசேட தேவையுடையோர் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மூன்று நாட்களாக இடம்பெற்றுவரும் இந்த அமர்வுகளில் எட்டப்படுகின்ற தீர்மானங்கள் மற்றும் முன்மொழியப்படும் பிரேரணைகள் அனைத்தும் அந்தந்த நாடுகளின் தேர்தல்கள் திணைக்களங்களிடம் கையளிக்கபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை இன்றைய தினம் இலங்கையின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடம் இந்த பிரேரணைகள் அடங்கிய கோரிக்கையானத கையளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனுாடாக வடக்கு மற்றும் கிழக்கில் விசேட தேவையுடைய தமிழ் மக்களுக்கு அரசியலில் பங்குபற்றுவதற்கான சந்தர்பமானது பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அருட்தந்தை கிறிஸ்டி ஜோண் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -