இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்ததாவது,
எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அ.இ. மக்கள் காங்கிரஸ் என்பன சஜித்தின் பங்காளி கட்சிகள் என்பதால் இவர்களும் பஸ் பிடித்து ஆட்களை திருட்டுத்தனமாக அனுப்பியிருப்பர்.
இவர்கள் அனைவரும் ஆளுக்கு பத்து பஸ் வண்டிகள் எடுத்து வர முடியும். ஆனாலும் அதுவும் போதவில்லை என்றே தெரிகிறது.
ஆனால் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினருடன் இருக்கும் ஜனாதிபதி ரணிலின் கட்சி மிகப்பெரிய மக்கள் தொகையை கண்டுள்ளது.
இவ்வாறு ஒப்பிட்டு பார்க்கும் போது ஜனாதிபதி ரணிலையும் அவரது பொருளாதார சீர்திருத்தங்களையும் மக்கள் பெருவாரியாக ஏற்று வருவதை காட்டுகிறது என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment