காதர் ஹாஜியாரின் மறைவு குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள இரங்கல் செய்தி

காதர் ஹாஜியாரின் இழப்பு முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு பெரும் இழப்பாகும். முன்னாள் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்ட மர்ஹும் ஏ.ஆர்.ஏ. காதர் ஹாஜியார் அவர்களின் மறைவு குறித்து கேள்யுற்ற நான் ஆழ்ந்த துண்பமும், கவலையும் அடைகின்றேன். முர்ஹும் காதர் ஹாஜியார் அவர்கள் அன்போடும், பண்போடும் செயற்பட்ட அவர் ஒரு விஷேட அரசியலிலே இருந்து கண்டி மாவட்ட மக்களுக்காக பல்வேறுபட்ட அர்ப்பணிப்புக்களை செய்த ஒருவர். மர்ஹும் காதர் ஹஜியாரின் சிறப்பம்சம் என்னவென்றால் பள்ளிவாசல்களை கட்டுவது, பள்ளிவாசல்களை பராமரிப்பது போன்ற விடயங்களில் அக்கறையுடன் செற்பட்ட ஒரு சமூகசேவைளாயரும், அரசியல் வாதியுமான இவர் சில காலமாக நோய்ப் பட்டிருந்த அவர் திடீரென மரணமடைந்ததையிட்டு நான் மட்டுமல்ல கண்டி மாவட்ட மக்கள் அனைவரும் கவலையடைகின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்திள்ள இரங்கலில் தெரிவித்துள்ளார்.

அவருக்காகவும், கப்ருடைய வாழ்வுக்காகவும், அவருடைய நல்லமல்களை அங்கீகரித்து அவருடைய கப்ரை சுவணப்பூஞ்சோலையாக ஆக்க வேண்டுமென பிரார்த்திப்போமாக!

அதேபோல் அவரது மனைவி, பிள்ளைகள், குடும்பத்தவர்கள் உட்பட கண்டி மாவட்ட ஆதரவாளர்கள் முஸ்லிம்கள் எல்லோருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஏன அமைச்சரின் இரங்கல் செய்தியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ரவூப் ஹக்கீம் பா.உ
தலைவர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -