பிஸ்மி இஸ்லாமியப் பாடசாலை மாணவர்களின் கல்விச்சுற்றுலா 2015..!

ஜு னைட்.எம்.பஹ்த்-
காத்தான்குடி பிஸ்மி இஸ்லாமியப் பாடசாலை மாணவர்களின் கல்விச்சுற்றுலா கடந்த 18.10.2015 ஞாயிற்றுக்கிழமை மு.ப. 05.00 மணிக்கு சுபஹ் தொழுகையுடன் ஆரம்பமானது. ஒருநாள் நேரசூசியைக் கொண்ட எமது கல்விச்சுற்றுலா காத்தான்குடி பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையிலிருந்து ஆரம்பமாகி கதுருவளை, ஹபரணை, அக்குரணை ஊடாக கண்டியை வந்தடைந்தது.

எமது பாடசாலை மாணவ மாணவிகள் நூற்றி ஏழு பேர் இதில் கலந்துகொண்டதோடு பிஸ்மி குழுமத்தின் தவிசாளர், பிஸ்மி இஸ்லாமியப் பாடசாலையின் பணிப்பாளர், உட்பட ஆசிரிய, ஆசிரியைகளும் கலந்து கொண்டனர். கண்டி மாவட்டத்தை மையமாகக் கொண்டு இடம்பெற்ற இக்கல்விச்சுற்றுலாவி­ல் எமது பாடசாலை மாணவ மாணவிகள் பேராதனை பல்கலைக்கழகம், பேராதனை தாவரவியல் பூங்கா, கண்டி தலதா மாளிகை, தெப்பக்குளம், கண்டி சிற்றி சென்டர் பேரங்காடி ஆகிய முக்கிய இடங்களை பார்வையிட்டதுடன் பல்வேறு விடயங்களையும் அறிந்து கொண்டனர். அத்தோடு செல்லும் வழியில் பராக்கிரம சமுத்திரத்தினையும் பார்வையிட்டனர். அத்துடன் சுற்றுலாவின் விசேட அம்சமாக பேராதெனிய பல்கலைக்கழகத்தின் புவியியல் பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலநிலை மாற்றம் சம்பந்தமான கண்காட்சி ஒன்றையும் பார்வையிட்டனர்.

மேலும் மாணவ மாணவிகள் அனைவரும் தெப்பக் குளத்தில் படகுச் சவாரியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. இறுதியாக 19.08.2015 திங்கள் அதிகாலை 02.30 மணியளவில் மாணவர்கள் பாடசாலை வந்து சேர்ந்தனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -