முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச பெரும்பாலும் சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்து ராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றார் என்ற குற்றச்சாட்டின்பேரில் நடத்தப்பட்ட விசாரணைகளில் சசி வீரவன்ச குற்றவாளியாக இனக்காணப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் விசாரணையை முடித்துக் கொண்டுள்ள சிஐடியினர் மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளனர்.
சசி வீரவன்ச 2004ஆம் ஆண்டு மே 24ஆம் திகதியன்று பெற்றுள்ள சாதாரண கடவுச்சீட்டுக்காக (என்1284124) 675320233V என்ற பிறப்புச் சான்றிதழை சமர்ப்பித்துள்ளார்.
எனினும் ராஜதந்திர கடவுச்சீட்டுக்காக (டி3642817) அவர் 715344696V என்ற பிறந்த திகதியை கொண்ட பிறப்புச் சான்றிதழை சமர்ப்பித்துள்ளார். இதன்படி பிறந்த திகதி 1971 பெப்ரவரி 3 ஆகும்.
