ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு சம்பந்தன் அவசர கடிதம்..!

போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்பதை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேரில் சென்று வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர்க்குற்ற விசாரணை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒரு தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உதவும் வகையில் இருக்காது என்பது நேற்று தெளிவாகியுள்ளது.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்புவதற்கான கடிதம் ஒன்றை வரையும் பணியில் நேற்று தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

அந்தக் கடிதத்தில், ஐ.நா மனித உரிமை ஆணையாளரை ஜெனிவாவில் சந்திப்பதற்கான விருப்பத்தை வெளியிடவுள்ளார்.

அனைத்துலக விசாரணைக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் ஆதரவைப் பெற வேண்டிய தேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது என்று கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -