போதைப்பொருள் வில்லைகளை தம்வசம் வைத்திருந்த ஒருவர் பொத்துவில் பிரதேச சுற்றுலா விருந்தகம் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை தொகுதி மோசடி தவிர்ப்பு பிரிவின் அதிகாரிகள் இன்று குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் அடிப்படையில் சந்தேகத்திற்குரியவர் குறித்த விருந்தகத்தில் நடன கலைஞராக பணியாற்றுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட 25 வயதான இளைஞர் இன்று பொத்துவில் நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
