கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்திற்கு பட்ஜெட்டில் விசேட நிதி..!

அஸ்லம் எஸ்.மௌலானா-

ல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய நகருக்கான வரைபடத்திலுள்ள முக்கிய அம்சங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

புதிய நகருக்காக வயல் பகுதியில் சுமார் 800 ஏக்கர் காணியை நீரப்புவதர்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கல்முனை மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் எடுத்துக் கூறினார்

நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் உதவிச் செயலாளர் பொறியியலாளர் ரமேஷ் அவர்கள் கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின் தொழில் நுட்ப விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தினார்.

இதனைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தமது கருத்துகளை முன்வைத்தனர். இதன்போது முன்வைக்கப்பட்ட சில பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் 26ஆம் திகதி அமைச்சின் உயர் அதிகாரிகள் கல்முனைக்கு விஜயம் செய்து கலந்துரையாடல்களை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், அலி சாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், கல்முனை பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி உட்பட மாநகர சபை உறுப்பினர்களும் மற்றும் அரசியல் பிரமுகர்களும் அமைச்சின் உயர் அதிகாரிகளும் பிரதேச செயலாளர்கள் உட்பட திணைக்களங்களின் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.

இந்த உயர்மட்டக் கூட்டம் தொடர்பில் ஊடகங்க்கலுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம்; கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டத்திற்கு இம்முறை படஜெட்டில் விசேட நிதி ஒதுக்கீட்டைச் செய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார் என்று குறிப்பிட்டார்.

கடந்த தேர்தலின்போது கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்திருந்தார் என்றும் அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டினார். இதற்கு ஏற்ற வகையில் குறித்த திட்டத்திற்கான முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த உயர்மட்டக் கூட்டம் தொடர்பில் ஊடகங்க்கலுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், 

கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டத்திற்கு இம்முறை படஜெட்டில் விசேட நிதி ஒதுக்கீட்டைச் செய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார் என்று குறிப்பிட்டார்.

கடந்த தேர்தலின்போது கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்திருந்தார் என்றும் அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டினார். இதற்கு ஏற்ற வகையில் குறித்த திட்டத்திற்கான முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -