ஜம்மியதுல் உலமா சபை சமூகத்திற்கு முதுகெலும்பாக பணிகளை புரிந்துள்ளது!

இக்பால் அலி-

கில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை முஸ்லிம் சமூகத்திற்கு முதுகெலும்பாக இருந்து பல்வேறு வகையான பணிகளை ஆற்றி சமூகத்தின் மத்தியில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. 

அந்த வகையில் குருநாகல் மாவட்டத்திலும் பல்வேறு சமூகப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து பரந்தபட்ட ரீதியில் தம் பணியை அமைதியாக முன்னெடுத்துச் செல்வதாக என்று இஸ்லாமிய சர்வதேச நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதியும் குருநாகல் சிட்டி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஜே.எம். இம்ரான் தெரிவித்தார், தெரிவித்தார்.

குருநாகல் சிட்டி ஜம்மிய்யதுல் உலமா சபையின் ஏற்பாட்டில் குருநாகல் நகர் பள்ளிவாசல்களின் நிர்வாகிளுக்கான செயலமர்வும் மற்றும் விசேட இப்தார் நிகழ்வும் குருநாகல் தம்புள்ள வீதியில் அமைந்துள்ள ஹோட்டலில் நேற்று 06-07-2015 இடம்பெற்றது. இந்நிகழ்வில் தலைமையுரை நிகழ்த்திய போதே இஸ்லாமிய சர்வதேச நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதியும் குருநாகல் சிட்டி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஜே.எம். இம்ரான் அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;

இன்று எமது முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் கொள்கை ரீதியிலான பிரச்சினை, இளைஞர்களுக்கிடையே காணப்படும் ஒழுக்கம் தொடர்பான பிரச்சினை, மார்க்கக் கருத்துவேறுபாடுகள் தொடர்பான பிரச்சினைகள் ஆகிய பிரச்சினைகளுக்;கு ஜம்மிய்யதுல் உலுமாவும் பள்ளிவாசல் நிர்வாகிகளும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டிய முக்கிய காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். 

குருநாகல் நகரிலுள்ள பள்ளிவாசல்களுக்கு உலமாக்கள் சேர்த்துக் கொள்ளும் போது குருநாகல் நகர் ஜம்மிய்யதுல் உலமாவின் ஊடாக உலமாக்களை எதிர்வரும் காலங்களில் பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரு பள்ளிவாசலுக்கு தகைமை வாய்ந்த உலமாக்களை நியமனம் செய்யும் போது முதலில் ஜம்மியதுல் உலமாவினால் நேர்முகப் பரீட்சை செய்யப்பட்டு பரிசீலனை செய்த பின்பு தான் விண்ணப்பம் கோரியிருந்த பள்ளிவாசலுக்கு அந்த உலமா நியமனம் செய்யப்படுதல் வேண்டும். 

இவ்வாறு தெரிவு செய்து செயற்படுத்து; போது தகுதியும் தகைமையும் வாய்ந்த உலமாக்களை ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் கடமை ஈடுபடுத்த முடியும் என்பது மட்டுமல்ல. தற்போது ஊடுருவி வரும் ஷியாக்காரர்களையும் தடுத்து நிறுத்தக் கூடியதாக அமையும். எனவே இந்த முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் விசேட வளவாளர்களாக அஷ்ஷெய்க் எஸ் எச். எம் பழீல், அஷ்ஷெய்க் றமீஸ் ஆகியோவர்களுட குருநாகல் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் உப தலைவர் அஷ்ஷெய்க் ஹபீழ், பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க இசாக்லெப்பை, நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்ஷெய்க ஜருக், குருநாகல் சிட்டி ஜம்மிய்யதுல் உலமா சபைச் செயலாளர் பௌமி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -