சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய சுரேஷ் ரெய்னா மற்றும் பிராவோ!

நிதி மோசடி தொடர்பான புகாரில் சிக்கிய ஐ.பி.எல். இன் முன்னாள் தலைவர் லலித்மோடி தற்போது இந்திய கிரிக்கெட்டில் புதிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் சபையின்தலைமை நிர்வாகி டேவ் ரிச்சர்ட்சனுக்கு தான் அனுப்பிய மின்னஞ்சல் தொடர்பான விடயங்களை வௌிப்படுத்தியதன் மூலமே இந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

எனினும் அந்த மின்னஞ்சலில் காணப்படும் விடயங்கள் தொடர்பாக அவர் தௌிவாக எதனையும் குறிப்பிடாத போதும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த மூவர் சூதாட்ட தரகர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தனர் என தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு டேவ் ரிச்சர்ட்சனிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

தற்போது அந்த மூன்று வீரர்களும் யார் எனும் தகவல்கள் வௌிவந்துள்ளன. ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா மற்றும் மேற்கிந்திய அணியைச் சேர்ந்த பிராவோ ஆகியோரே அந்த வீரர்களாவர்.

அத்துடன் இந்த கடிதம் தமக்கு கிடைக்கப்பெற்றதை சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -