மஹிந்த,மைத்திரியின் மற்றுமொரு சந்திப்பு...!

னாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் பிறிதொரு சந்திப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்பொருட்டு இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விசேட குழு சந்திக்கவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய கூட்டம் ஒன்று கடந்த 16ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, மைத்திரி -மகிந்த இணக்கப்பாட்டுக்கென விசேட குழுவொன்று அமைக்கப்பட்டது.

இதன்படி, அந்த குழுவினர் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளது.

இந்த சந்திப்பின் போது, எதிர்வரும் தினத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், மகிந்த ராஜபக்ஸவையும் மீண்டும் சந்திக்க வைப்பது குறித்த பேசப்படவுள்ளதாக இந்த குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -