அமைச்சர் ஹலீம் பாக்கிஸ்தான் நாட்டு உயர் ஸ்தானியகராலதின் தூதுவர்களுடன் நல்லெண்ணச் சந்திப்பு!

பாக்கிஸ்தான் நாட்டின் மூலமாக இலங்கையிலுள்ள அனைத்து இன மக்களுக்கும் நீண்ட காலமாக பல தரப்பட்ட உதவிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

யுத்த காலத்தில் செய்யப்பட்ட உதவிகள் முதல் முஸ்லிம் மக்களுடைய கல்வித் தேவையைக் கருத்திற் கொண்டு புலமைப் பரிசில் நிதி உதவி வழங்குதல் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்தல் போன்ற பல பணிகள் புரிந்து வருகின்றோம். 

 இலங்கை பாக்கிஸ்தான் நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் தொடர்ந்து உதவகள் செய்யவுள்ளதாக என்று பாக்கிஸ்தான் நாட்டு உயர் ஸ்தானியராலகத்தின் தூதுவர் மேஜனர் செனரல் செய்யத் சகீல் உஸைன் தெரிவித்தார்முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் பாக்கிஸ்தான் நாட்டு உயர் ஸ்தானியகராலதின் தூதுவர் மேஜர் ஜெனரல் செய்யத் சகீல் உஸைன் ஆகியவர்களுடையகிடையிலான நல்லெண்ணச் சந்திப்பு அமைச்சரின் அலுவலகத்தில் 17-06-2015 நடைபெற்றது.

 இந்தச் சந்தப்பில் பாக்கிஸ்தான் நாட்டு உயர் ஸ்தானியகராலயத்தின் உதவித் தூதுவர் சிப்ரா மற்றும் பாக்கிஸ்தான் நாட்டு நட்புறவுக்கான இலங்கைக்கான பிரதிநிதி தொழிலதிபர் ஹப்சல் மரைக்கார் அமைச்சரின் அந்தரங்கச் செயலாளர் எம். எச். ஏ. பாஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பின் போது பரஸ்பர நல்லெண்ணக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் போது அமைச்சர் ஹலீமிடம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அப்போது அமைச்சர் ஹலீம் மலையகத்திலுள்ள முஸ்லிம் மக்களுடையே காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளைக் நேரடியாக வந்து பார்வையிட வேண்டும் என முன் வைத்த வேண்டுகோளுக்கு இணங்க அங்கு வருகை தருவதற்கு தூதுவர் இணக்கம் தெரிவித்தார். அப்போது கண்டி அக்குரணையிலுள்ள சியா வைத்தியாசாலைக்கும் விஜயம் , கண்டியிலுள்ள ஜின்னா ஞாபகார்த்த மண்டபம் என்பவற்றைப்பார்வையெல்லாம் பாவையிடுதவற்கு தீர்மானித்துள்ளனர்.

இக்பால் அலி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -