பொத்துவில் பிரதேசமானது கிழக்கு மாகாணத்தின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு ஊராகும். பொத்துவில் பிரதேசத்தின் நாமம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெயர் வீசக்காரணம் இம்மண்ணில் அழகுவாசம் வீசுவதுதான். பொத்துவில் பிரதேசத்தின் பெரம்பான்மை சமூகமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்.
முஸ்லிம்கள் சிங்களவர்களோடும், தமிழர்களோடு ஒற்றுமைப்பட்ட சமூகமாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிங்கள மக்களோடு சகோதரர்களாக முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தமைக்கான ஏராளமான சான்றாதாரங்கள் இருந்த போதிலும் குறித்துக்காட்டக்கூடிய சான்றாதாரம் முகுது மகா விகாரை என்று சொல்லப்படும் தொல்பொருள் இடத்தை பாதுகாத்ததும் பராமரித்ததும் பொத்துவில் முஸ்லிம்கள்தான்.
இவ்வாறு முஸ்லிம்களால் அடையாளப்படுத்தப்பட்ட தொல்பொருள் இடத்தை அடிப்படையாகக் கொண்டு இன்று முழுப்பொத்துவிலையும் பௌத்த அடையாளத்தோடு தூபிகளையும், சிலைகளையும் நிறுவி வருவது ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக பொத்துவில் பிரதேசமானது கடந்த காலங்களில் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் ஆட்சியில் பொத்துவிலின் முக்கியமான இடங்கள் சூறையாடப்பட்டு பௌத்த இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டது.
ஆனால் முஸ்லிம்கள் பொறுமையோடு சகோதரர்களாகவே மதித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரவு நேரத்தில் பொத்துவில் மக்கள் தூக்கத்தில் இருக்கும் பொழுது பாதுகாப்புத்தரப்பினரின் அங்கிகாரத்தோடு இந்த திருவிளையாடல் இடம்பெற்றது.
குறிப்பாக அறுகம்பைப் பகுதியில் சுனாமியால் சேதமாக்கப்பட்ட பாலத்தை அடிப்படையாகக் கொண்டு தூபியும், சிலையும் அமைத்து இன்றும் அதனுடைய கட்டுமானங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. மூன்றாம் கட்டை வீதியில் பழைய கற்களாலும், பழைய காலத்து கட்டுமானத் தோற்றத்திலும் மெல்ல மெல்ல சைத்திய நாளொரு மேனியாக வளர்ந்து வருகிறது. அறுகம்பை உல்லைப்பகுதியின் வீதி குறுக்கை தொடர்ந்த சிலையும், சைத்தியவும் கட்டப்பட்டன. இவையெல்லாம் மகிந்தவின் ஆட்சியின் அத்துமீறல்கள்.
இந்த வரலாற்று அடிப்படையில் தொல்பொருள் இடத்திற்கு பக்கத்தில் சுத்தமான மண்ணாலான மணல்மேடு உண்டு. இதை பார்ப்பதற்காக வேண்டி ஏராளமான சுற்றுலாத்துறையினர் பொத்துவிலுக்கு வருகை தந்தனர்,தருவர். மகிந்தவின் ஆட்சியில் அந்த மணல் மேட்டை அழித்து தாதுகோபுரம் அமைக்கப்பட்டது. இந்த தாதுகோபுரத்தை அமைப்பதற்கான அனுமதியினை பொத்துவில் பிரதேச சபையின், கரையோரம் பேணும் திணைக்களத்தின் அனுமதியின்றி தொல்பொருள் திணைக்களத்தின் அங்கிகாரத்தோடு கட்டுமானம் நடந்தேறியது. ஆகவே இது அத்துமீறல்.
இந்த அத்துமீறலின் முடிவு கடந்த அரசாங்கத்தின் திட்டமிட்ட சதிகாரர்களால் மேற்கொள்ளப்பட்டது. அதனை அன்று பொத்துவில் முஸ்லிம்கள் எதிர்த்தார்கள் காரணம் சிங்கள மக்கள் யாருமில்லாத இடத்தில் இந்த சைத்திய அமைக்கப்படவேண்டுமா? ஆனால் அன்றைய அரசாங்கதத்pன் வேடம்தாங்கிகள் பொறுப்படுத்தவில்லை.
ஆட்சிமாற்றம் ஏற்பட்டது பொத்துவில் பிரதேசத்தில் நல்லாட்சியில் விடிவு கிடைக்கும் சுரண்டப்பட்ட நிலங்கள் நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்போடு மக்கள் நம்பிக்கையோடு இருந்த போதுதான் அந்த நம்பிக்கை வீணாகியது ஆம் அன்று பொத்துவில் பிரதேச சபையின், கரையோரம் திணைக்களத்தின் அனுமதியின்றி அத்துமீறி கட்டப்பட்ட சைத்திய தாதுகோபுரத்தை இன்று எதிர்வரும் 20ம் திகதி புதிய ஜனாதிபதி நல்லாட்சியின் பிதாமகன் திறக்கவிருக்கின்றார் எனும் செய்தியறிந்ததும் பொத்துவில் மக்கள் முற்றுமுழுதாக ஏமாற்றம் அடைந்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.
அதுமாத்திரமன்றி தாதுகோபுரம் அமைக்கின்ற பொழுது கட்டுமானக்குழுவினரால் பொத்துவில் பிரதேச சபைக்கு ஒரு கடிதம் கொடுத்தனர் அது என்னவென்றால் தாதுகோபுரம் அமைப்பதற்காக வேண்டிய தற்காலிகமாக பாதையிடப்படும் பிறகு அப்பாதை மூடப்படும் என்று ஆனால் அந்தப்பாதை இப்பொழுது பூரணமாக அமைப்பதற்குரிய ஏற்பாடுகள் நடந்தேறுகின்றது.
ஏதிர்வரும் 20 திகதி திறக்கவிருக்கும் சைத்தியவிற்கு புதிய ஜனாதிபதி மைத்திரி வரவிருக்கின்றார். முழுப்பொத்துவில் வீதிகளிலும் பௌத்த கொடிகள் கட்டப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பொத்துவில் முஸ்லிம்களும், சிங்கள சகோதரர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதற்கான வரலாற்று தடயம் இதுதானோ????
தாஜகான்
பொத்துவில்
