நான் அடுத்த தேர்தலில்போட்டியிடுவதா? இல்லையா? ஹரீஸ் எம்.பி அழுத்தமாக தெரிவிப்பு

எஸ்.எம்.அறூஸ்-

நேற்று கல்முனையில் உள்ள உலமாக்கல், பள்ளிவாசல் சமூகத்தினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னரான செயற்பாடுகள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்த கூட்டத்தில் கல்முனையில் உள்ள ஜம்மியத்துல் உலமா சபையினர், சுன்னதுல் ஜமாத் உலமாக்கல், ஜூம்ஆப் பெரியபள்ளிவாசல் மற்றும் தௌஹித் ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் பரக்கத்துல்லா, மசூரா அமைப்பின் தலைவர் கரீம் ஹாஜியார் என முக்கியமானவர்கள் கலந்து கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக அமைந்தது .

கடந்த காலத்தில் கல்முனையில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்புள்ள புதிய அரசியல் சூழ்நிலை சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தனது நிலைப்பாடாக கல்முனைத் தொகுதி மக்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி என்பது முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஊடாகவே மட்டும்தான் அடைய முடியும் என்பதை இங்கு வலியுறுத்தினார்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்பு தான் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான எந்தத் தீவிர அரசியல் ஈடுபாட்டில் ஈடுபடாமல் சற்றுஅமைதியாக ஒதுங்கியவனாக இருக்கின்றேன் .
அடுத்த பாராளுமன்றத் தேர்தல் என்பது சவாலான ஒரு விடயமாகும். தான் திறந்த மனதுடன் இருக்கின்றேன். நான் போட்டியிட வேண்டும் என்று ஆசை ஆர்வத்தில் கட்சியின் தலைமைத்துவத்திடம் நான் பேசவில்லை.

ஏன், என்றால் இது ஒரு அமானிதம். இதனை இந்த சபையிடம் ஒப்படைக்கின்றேன் வருகின்ற தேர்தலில் நான் போட்டியிட வேண்டுமா? இல்லையா? என்பதை இந்த சபை தீர்மானிக்க வேண்டும்.இது சம்பந்தமாக உங்களிடம் மாற்றுக்கருத்துக்கள் இருந்தால் வெளிப்படையாக தெரிவியுங்கள். இந்த சபை எடுக்கின்ற முடிவுக்கு கட்டுப்பட தயாராக இருக்கின்றேன்.
என்னுடைய அரசியல் வாழ்க்கையில் இந்தப் பதவிக்குத்தான் நான்தான் வரவேண்டும் என்பதில் ஆசைப்பட்டவனாக இல்லை. திறந்த மனதுடன் இருக்கின்றேன். முஸ்லிம் சமூகத்தினதும், மாவட்ட மக்களினதும் என்மீதான எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்த சபை எடுக்கின்ற முடிவுக்கு இணங்கி செயற்பட தயாராக உள்ளேன்.

நான் அளுத்தமாக கூறுகின்ற விடயம் தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக எந்தத் தீர்மானமும் இல்லாமல் இருந்து கொண்டிருக்கின்றேன் என்பதை உருக்கமாக உறுதிப்படுத்தினார்.

மேலும் கடந்த ஐந்து வருட பாராளுமன்ற காலப்பகுதியில் மிக முக்கியமான சவால்கள் இருந்தது. அதில் கல்முனை நகர பிரச்சினை புதாகரமாக இருந்தபோது அதற்கு முகம்கொடுத்து மிகக் கவனமாக செயற்பட்டதனால் கல்முனை நகர் பாதுகாக்கப்பட்டது.

அதேபோன்று கல்முனைத் தொகுதியின் அபிவிருத்திக்கும் எனது சக்திக்கு உட்பட்ட வகையில் பல்வேறு விதமான அபிவிருத்தி திட்டங்களை செய்திருக்கின்றேன். எனினும் அபிவிருத்திகள் இன்னும் கூடுதலாக இடம்பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், ஆதங்கமும் உங்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் இருப்பதால் பாராளுமன்ற உறுப்பினர் என்றபடியால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே என்னால் செய்ய முடியும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

எனவே, இவ்வாறு என்னுடைய இந்தக் கல்முனைத் தொகுதியில் மட்டுமல்ல வாக்களித்த எல்லா முஸ்லிம் பகுதிகளுக்கும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற கடமை எனக்கு உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் ஒரளவு திருப்தியடைந்துள்ளேன்.

இங்கு உலமாக்கல் பாராளுமன்ற உறுப்பினரிடம் பல்வேறு விதமான விடயங்கள் தொடர்பில் .திறந்த மனதுடன் பேசியிருந்தனர்.அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.. முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினாலும்,அதன் தலைவரினாலும் ஆற்றப்பட வேண்டிய விடயங்களை உலமாக்கலும், பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அதேநேரம் உலமாக்கல் இந்த கல்முனை தொகுதியில் குறிப்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுதலைப்புலிகள் காலத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டபோதும், தமிழ் பிரதேச செயலக பிரிப்பு சம்பந்தமான பிரச்சினை ஏற்பட்டபோதும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கல்முனையின் பாதுகாப்புக்கு காத்திரமான பணிகளை செய்துள்ளார்..

கல்முனை பாராளுன்ற உறுப்பினர் என்கின்றபோது ஹரீஸ் எம்.பி அவர்கள்தான் தலைமை தாங்க வேண்டும் என்று உலமாக்களும், பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் வலியுறுத்திப் பேசினர். இறுதியாக கல்முனைத் தொகுதியின் எதிர்கால பாராளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் அரசியல் விடயமாகவும், கட்சி தொகுதிக்கு ஆற்ற வேண்டிய விடயங்கள் சம்பந்தமாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை உயர்மட்டக்குழு சந்தித்து விரிவாக பேசுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

பாராளுமன்றத் தேர்தலில் கேட்பதா இல்லையா? என்பதை இறுதி முடிவு எடுக்கவில்லை என்பதை இங்கு பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் இறுதியாகக் கூறியதுடன் அதனை உலமாக்களாகிய நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசியிருந்தார்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் அம்பாரை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்தலைவரும், கல்முனை அனைத்து பள்ளிவாசல் மற்றும் பொது நிறுவனங்களின் தலைவருமான டாக்டர். எஸ்.எம்.ஏ.அஸீஸ், கல்முனை தௌஹித் பள்ளிவாசல் தலைவர் செய்லாப்தீன் ஹாஜியார், ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் சுல்தான் ஹஸரத், சுன்னத்துல் ஜமாத் உலமா சபைத் தலைவர் ஜெலீல் மௌலவி மற்றும் ஜம்இய்யத்துல் உலமா சபையின் உப தலைவர் நதீர் மௌலவி அதன் செயலாளர் மஜீத் மௌலவி, கல்முனை மாநகர சபை உறுப்பினர் பரக்கத்துல்லா, மசுரா குழுத்தலைவர் கரீம் ஹாஜியார் அத்துடன் சிரேஸ்ட உலமாக்கல் ,பள்ளிவாசல் நம்பிக்கையாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -