விஷேட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ரவூப் ஹக்கீம்!

சபீக் ஹுஸைன்-
ம்பாறை மாவட்டத்தில் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விஷேட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திங்கட்கிழமை (08) மாலை விமான மூலம் கொழும்பு திரும்பியுள்ளார். 

அரசியலமைப்பின் சர்ச்சைக்குரிய 20ஆவது சீர்திருத்தம் தொடர்பில் பெரும்பாலும் இறுதி முடிவு எட்டப்படக் கூடுமென எதிர்பார்க்கப்படும் பிரஸ்தாப அமைச்சரவைக் கூட்டத்தில் சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும், சிறிய அரசியல் கட்சிகளும் பாதிக்கப்படாத வண்ணம் தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படலாம் என நம்பப்படுகிறது.(ந)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -