சுலைமான் றாபி-
கல்முனை - அக்கரைப்பற்று வீதியில் கல்முனைப் பிரதேசத்தில் இன்று (08) சற்றுமுன் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமுற்ற நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
KW 5524 எனும் இலக்க மோட்டார் காரும், WY 7983 ஆம் இலக்க மோட்டார் சைக்கிளும் மோதுண்டதனாலையே இவ்விபத்து நேர்துள்ளது.
இதில் குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் தனக்கு முன்னால் சென்ற வாகனத்தினை முந்திக்கொண்டு சென்றபோது, தான் சென்ற வேகத்தினை கட்டுப் படுத்த முடியாமல் முன்னால் வந்த மோட்டார் காருடன் மோதுண்டதனாலையே இவ்விபத்து சம்பவம் நேர்ந்துள்ளது.
இதேவேளை இவ்விபத்து சம்பவத்தில் குறிப்பிட்ட மோட்டார் சைக்கிலினை ஓட்டி வந்தவர் காயமடைந்த நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, இந்த விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(ந)

