ஹாசிப் யாஸீன்-
சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு வைத்தியசாலை இரத்த வங்கியில் இடம்பெற்றது.
தாதிய உத்தியோகத்தர்கள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் எஸ்.தேவப்பிரதாபன் தலைமையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வினை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன் ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஐந்து தினங்களுக்கு பல்வேறு சுகாதார மேன்பாட்டு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தாதிய நலன்புரிச் சங்கத் தலைவர் எஸ்.தேவப்பிரதாபன் தெரிவித்தார்.(ந)