அஸ்ரப் ஏ சமத்-
இலங்கைக்கு வருகைதந்த அமேரிக்க வெளியுரவுச் செயலாளர் ஜன் கெரி தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் இராசம்பந்தனை இன்று சந்தித்தார்.
சம்பந்தனுடனுனான சந்திப்பு கொழும்பு தாஜ் கோட்டலில் இடம்பெற்றது. இதில் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஆகியோருடன் வடக்கின் மீள்கட்டமைப்பு வேலைகள் பற்றி கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துறையாடலின்போது தெற்காசிய நாடுகளுக்கான உதவிச் செயலாளர் நிசா விஸ்வாலும் உரையாடினர்.
இன்று கெரி இலங்கையில் இருந்து தமது விஜயத்தை முடித்துக் கொண்டு செல்கின்றார். இவர் ஏற்கனவே ஜனாதிபதி, வெளிநாட்டு அமைச்சர், பிரதமமந்திரி ஆகியோரையும் சந்தித்தார்.
அத்துடன் நேற்று இரவு களனி பௌத்த விகாரைக்குச் சென்று வெசாக் தின நிகழ்விலும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஒரு இரு வாரங்களுக்கு அமேரிக்க ஜனாதிபதி ஒபாமா இலங்கை வரக் கூடும் எனவும் இலங்கைக்கு அமேரிக்கா நிச்சயம் பொருளாதாரம். வியாபாரம், முதலீடுகளில் உதவ உள்ளதாக கெனரி தெரிவித்தார்.
புதிய அமேரிக்கா உயர் ஸ்தாணிகர் அலுவலகமொன்றுக்கு அடிக்கல் நாட்டி. அத்த்துடன் லக்ஸ்மன் கதிகாமர் நிலையத்தில் விசேட உரைநிகழ்த்தியவர். அத்துடன் இன்று கென்யா நாட்டுக்கு பயணமாகின்றார்.
.jpg)
.jpg)
.jpg)