ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு அக்கட்சி முன்னெச்சரிக்கை..!

குருநாகலில் நாளை இடம்பெறவுள்ள மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு கூட்டத்தில் கலந்து கொள்ள எதிர்பார்க்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு அக்கட்சி முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. 

இன்றைய தினம் ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி,  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மே மாதம் 5ம் திகதி எடுத்த தீர்மானத்தை அதன் உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த ஊடக அறிக்கை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளர் என்று உரிமைக் கோரி அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் தான் அப்படி ஒரு அறிக்கையை அனுப்பவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்தார். 

இது குறித்து முதலில் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த அப்படி அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்படவில்லை எனத் தெரிவித்ததோடு மீண்டும் ஒருமுறை அவரிடம் வினவியபோது அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைத்திருக்கலாம் என்று பொறுப்பற்ற பதில் அளித்தார். 

குறித்த ஊடக அறிக்கையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஊடகப் பேச்சாளர் என்று உள்ளதே தவிர கையொப்பம் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.sa
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -