ரோஹிஞ்சா இன மக்களுக்கு உதவ ஆங் சான் சூகி நடவடிக்கை எடுக்க வேண்டும் - தலாய் லாமா

மியன்மாரில் உள்ள ரோஹிஞ்சா இன மக்களுக்கு உதவ ஆங் சான் சூகி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தப் பிரச்சினை குறித்து கடந்த காலங்களில் தாம் ஆங் சான் சூகியிடம் கலந்துரையாடியிருப்பதாகவும் அது தொடர்பில் அவரால் நடவடிக்கை எடுக்கமுடியும் என தாம் நம்புவதாகவும் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மியன்மாரின் பிரஜைகளாக அங்கீகரிக்கப்படாத ரோஹிஞ்சா மக்களின் பிரச்சினை தொடர்பில் ஆங் சான் சூகி வாய் திறக்க மறுப்பதாக சர்வதேச அளவில் விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் மியன்மாரில் ரோஹிஞ்சாக்கள் விவகாரம் மிகவும் சிக்கலானது.

அங்கு சூகியின் அரசியல்கட்சி இந்த ஆண்டின் இறுதியில் இடம்பெறவுள்ள தேர்தலில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.sa
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -