பளுலுல்லாஹ் பர்ஹான்-இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல அனைத்து மக்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன என்பதையும் நாம் அறிவோம்.
சமாதான காலத்தில் அதாவது யுத்த காலத்துக்கு முன்னர் இம்மாவட்டத்தில் வாழ்ந்த சிங்களக் குடும்பங்கள் தற்போது மீளக்குடியேறுவதில் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் சிங்கள பௌத்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்பட வேண்டும். அவர்கள் யுத்தத்துக்கு முன்னர் வசித்த பகுதிகளில் மீளக்குடியேற வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பாடுபட்டு வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகப் பாடுபடுகின்றார் என்பதை நாங்கள் உணர்கின்றோம்.
இந்த நல்லிணக்கத்திற்கு நாங்கள் என்றும் தடையானவர்களல்ல. இந்த இன நல்லிணக்கத்திற்கு முயற்சிக்கு நாம் என்றும் ஆதரவினை தெரிவிப்போம். எனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரர் மேலும் தெரிவித்தார்.

