ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
அமெரிக்காவில் கொரோனா வைரஸை தவிர்த்து பிறநோயால் உயிரிழப்பு ஏற்படுவதாக அமெரிக்க நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் ( Centers for Disease Control and Prevention ) தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 183,579 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 6% உயிரிழப்புகள் மட்டுமே கொரோனா வைரஸால் நிகழ்ந்துள்ளதாகவும் 94% வேறு நோயால் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிமோனியா, சுவாச செயலிழப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மாரடைப்பு, இதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு, போன்ற நோய்களில் ஏதேனும் ஒரு நோய் தாக்கியிருப்பதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகவலை அமெரிக்க நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment