ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதன்கிழமை அமைச்சரவை கூடிய போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்குமிடையில் கடுமையான வாக்கு வாதங்கள் இடம்பெற்றுள்ளன.
புதிய தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. அப்போது இந்தச் சட்டமூலத்தால் சிறுபான்மை இன மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதனை அமைச்சர் ஹக்கீம் சுடடிக் காட்டியுள்ளார்.

அத்துடன் தான் ஒரு பொறுப்பு வாய்ந்த கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
இதன் போது குறுக்கிட்ட சம்பிக்க ரணவக்க உத்தேச சட்ட நகலை ஆதரித்தும் அதற்கான திருத்தங்களை எதிர்த்தும் காரசாரமாக கருத்துகளைத் தெரிவித்த போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவருடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆத்திரமடைந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள், இதைத் தீர்மானிப்பதற்கு நீங்கள் யார்? என ஆக்ரோஷமடைந்த நிலையில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.